உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிஷப் ஷெட்டி - நாக வம்சி கூட்டணியில் மோட்டார் சைக்கிள் டைரீஸ்

ரிஷப் ஷெட்டி - நாக வம்சி கூட்டணியில் மோட்டார் சைக்கிள் டைரீஸ்

ரிஷப் ஷெட்டி மற்றும் நாக வம்சி ஆகியோர் மோட்டார் சைக்கிள் டைரீஸ் என்ற புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.சாலைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் மூலம் சிவா சிரந்தனா இயக்குநராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தெலுங்கில் தயாராகும் இப்படம் கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. காந்தாரா, காந்தாரா சாப்டர்-1 படங்களுக்கு பிறகு ரிஷப் ரெட்டி நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !