சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் ஸ்ரீரெட்டி
ADDED : 1709 days ago
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு, பாலியல் ரீதியாக பயன்படுத்தி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக தமிழ், தெலுங்கில் உள்ள திரைப்பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீரெட்டி. சமூகவலைதளங்களில் கவர்ச்சியாக படங்களை பதிவிடும் இவர் இப்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். விளம்பர படங்களை இயக்கிய மது இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. உங்களின் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் தேவை என்கிறார் ஸ்ரீரெட்டி.