மும்பை மக்களுக்கு உணவு வழங்கிய சன்னிலியோன்
ADDED : 1840 days ago
கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். தன்னார்வலர்கள் பலர் இவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
திரையுலகில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனுசூட் என பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தற்போது நடிகை சன்னி லியோனும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியிருக்கிறார். அதோடு அவர்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களையும் வழங்கியுள்ளார். இதுகுறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.