பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப விழாவில் விஜய் டிவி பிரபலங்கள்
ADDED : 1647 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை பிரம்மண்டமாக நடத்தினர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களிடையே நல்ல வரேவற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த தொடரின் நாயகியான தனம் கதாபத்தித்திற்கு ரசிகர்கள் ஏராளம். தனம் நீண்ட நாள் கழித்து கருவுற்றுயிருப்பதால், அவரது வளைகாப்பை அவரது குடும்பத்தினர் பிரம்மாண்டமாக நடத்தினர்.
மேலும் அதை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் சிங்கர் போட்டியாளர்களான மானசி மற்றும் அபிலாஷ் பாடலை பாடிக் கொண்டே வந்தனர். அவர்களை தொடர்ந்து ஈரோடு மகேஷ் கலந்து கொள்கிறார். இவ்வாறாக தனத்தின் வளைகாப்பு விஜய் டிவி பிரபலங்களுடன் கோலாகலமாக நடந்தது.