எந்த சமூகவலைதளத்திலும் இல்லை : பசுபதி
ADDED : 1537 days ago
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து பெயர் வாங்குபவர் நடிகர் பசுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் வேடம் என பயணிக்கும் பசுபதி எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை. ஆனால் இவர் பெயரில் போலியான சமூகவலைதள கணக்குகள் உலாவுகின்றன. இதை அவருடயது என நம்பி ரசிகர்கள் பலரும் பின் தொடருகின்றனர். இந்நிலையில் தான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லை என பசுபதி தனது செய்தி தொடர்பாளர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதோடு சமீபத்தில் ஆர்யாவுடன் தான் முக்கிய வேடத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கும், பாராட்டுக்கும் நன்றி கூறியுள்ளார் பசுபதி.