ஷங்கர் - ராம்சரண் படத்திற்கு கியாரா அத்வானியின் சம்பளம்
ADDED : 1771 days ago
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 8-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். இது மூன்று மொழிப்படம் என்பதால் தயாரிப்பாளர் தில்ராஜூவிடம் 4.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் கியாரா அத்வானி. ஆனால் இறுதியாக தில்ராஜு 3.75 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.