மம்முட்டி, ஆர்யா, பிருத்விராஜ், பிரியாமணி கூட்டணியில் "லோக்கல் பாய்ஸ்"
ADDED : 1535 days ago
கான்வெண்ட் பள்ளி மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விறுவிறுப்பாக சொல்லும் படமாக மலையாளத்தில் பதினெட்டாம்படி எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் லோக்கல் பாய்ஸ் பெயரில் வெளிவருகிறது. இதில், மம்முட்டி, ஆர்யா, பிருத்விராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் அரசு பள்ளி மாணவராக ஆர்யா நடித்துள்ளார். காஷிப் இசையமைக்கிறார். கூட்ட நிதி (Crowd Fund) மூலம் படங்களை தயாரித்து வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுத்த ரசிமீடியா மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெ.என் மீடியா ஒர்க் தியேட்டர் உரிமத்தை பெற்று வெளியிடுகிறது.