கவர்ச்சி பக்கம் திரும்பிய ஆத்மிகா
ADDED : 1494 days ago
ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படத்தில் நடித்திருந்தார்.தற்போது விஜய் ஆண்டனி உடன் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார். குடும்ப பாங்கான தோற்றத்தில் வலம் வந்த ஆத்மிகா தற்போது கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் ஆத்மிகா தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோஷூட் இளைஞர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டு வைரலாகி வருகிறது.