உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள இந்த படம் வரும் 10ந்தேதி வெளியாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்நிலையில் தலைவி பட விளம்பர பணிகளுக்காக இன்று(செப்., 4) கங்கனா சென்னை வந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று கங்கனா மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குனர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் உடன் இருந்தனர்.



தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திலும் கங்கனா, விஜய் உள்ளிட்ட தலைவி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !