கணவருடன் காயத்ரி போட்டோஷூட் - டிரெண்டாகும் புகைப்படங்கள்
ADDED : 1487 days ago
சென்னையைச் சேர்ந்த காயத்ரி உண்மையில் ஒரு டான்ஸர். மானாட மயிலாட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானர். இதனையடுத்து அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். காயத்ரியின் கணவர் யுவராஜ் ஜெயக்குமாரும் ஒரு டான்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் போடும் குத்தாடத்திற்கு ரசிகர்கள் அதிகம். தற்போது காயத்ரியும் யுவராஜும் சேர்ந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்களை காயத்ரி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது. முன்னதாக இருவரும் கிருஷ்ணன் ராதை கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வலம் வருகிறது.