மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1446 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1446 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
1446 days ago
ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பால்கி. அதன்பிறகு அமிதாப் பச்சனையும், தனுஷையும் இணைத்து இந்தியில் 'ஷமிதாப்' என்கிற படத்தை இயக்கினார் பால்கி. மேலும் அக்சய் குமாரை வைத்து 'பேடு மேன்' என்கிற படத்தை இயக்கிய பால்கி, கடைசியாக மிஷன் மங்கள் படத்திற்கு கதையும் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் படம் இயக்கி வருகிறார் பால்கி. ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு ஹிந்தியில் இது மூன்றாவது படமாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் துவங்கியுள்ளது. துல்கர் சல்மான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.
1446 days ago
1446 days ago
1446 days ago