மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1468 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1468 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1468 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த 'லம்போர்கினி உருஸ் கிராபைட் காப்ஸ்யூல்' கார் ஒன்றை வாங்கினார். இந்தியாவில் முதன் முதலில் அந்த வகை காரை வாங்கியவர் இவர் தான்.
அந்த காருக்காக பேன்ஸி நம்பவரை வாங்குவதற்கு மட்டும் சுமார் 17 லட்ச ரூபாயைச் செலவு செய்துள்ளாராம் ஜுனியர் என்டிஆர். அதற்காக நடந்த ஏலத்தில் TS 09 FS 9999' என்ற எண்ணை அவ்வளவு தொகை கொடுத்து பெற்றுள்ளார். எண் கணிதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள என்டிஆர் வீட்டில் உள்ள கார்களுக்கு 9999 என்ற எண்தான் ஏற்கெனவே இருக்கிறது. புதிய காருக்கும் அதே எண்ணை வாங்கியுள்ளார்.
இந்திய தயாரிப்பு கார்களில் 17 லட்ச ரூபாய்க்கு ஒரு காரையே வாங்கிவிடலாம். ஜுனியர் என்டிஆர் வாங்கிய லம்போர்கினி காரின் விலை சுமார் மூன்றரை கோடி.
1468 days ago
1468 days ago
1468 days ago