மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1441 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1441 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் காரணம் இல்லை என நடிகை ஷீலா தெரிவித்துள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். தற்போது ஷீலா தொடரிலிருந்து விலக்கப்பட்டதுடன், தொடரில் அவர் இறந்ததாகவும் காட்டப்பட்டது. இந்நிலையில் இதற்கு காரணம் ஷீலாவின் மகனும், நடிகருமான விக்ராந்தே காரணம் என செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் தான் காரணம் என்பது வெறும் வதந்தி தான். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விஜய் டிவி-யின் புதிய சீரியலில், ஹீரோயினின் அம்மாவாக நடிக்கிறேன். என்னை வேண்டுமென்றே நீக்கியிருந்தால், எதற்கு மீண்டும் அழைக்க வேண்டும்? என அதில் கூறியுள்ளார்.
1441 days ago
1441 days ago