மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1465 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1465 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1465 days ago
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரி டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பிக் பாஸ் கடந்த 2020 முதல் தாமதமாக ஒளிபரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டின் பிக் பாஸ் 5 வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி, ரசிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவி பிரியங்கா, நடிகை கெளசல்யா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
1465 days ago
1465 days ago
1465 days ago