இம்மார்டல்
தயாரிப்பு : ஏ.கே.பிலிம் பேக்டரி
இயக்கம் : மாரியப்பன் சின்னா
நடிப்பு : ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர், டி.எம்.கார்த்திக், ஆதித் யா கதிர், மாறன்
ஒளிப்பதிவு : அருண் ராதா கிருஷ்ணன்
இசை : சாம் சி எஸ்
வெளியான தேதி : செப் 4, 2026
நேரம் : 2 மணிரேநம் 11 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
சென்னையில் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் வீடு தேடி அலைகிறார். "5 ஆயிரம் கொடுத்தால் போதும், என் அறையை ஷேர் செய்துகிடலாம்" என போனில் அழைக்கிறார் கயாடு லோகர். ஒரு சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் அவருடன் வசிக்கும் போது ஜி.விக்கு காதல் வருகிறது. அதேசமயம் சில நாட்களில் கயாடு மீது சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் கயாடு பெண்ணே அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக இளைஞர்களின் ரத்தம் குடிக்கும் ஒரு ராட்சச மிருகம் என ஜி.வி. பிராகாஷிற்கு தெரியவர, அங்கிருந்து அவர் தப்பித்தாரா? அந்த மிருகம் பின்னணி என்ன? அது ரத்தம் குடித்ததா என்பது இம்மார்ட்டல் கதை. இந்த தலைப்புக்கு சாகாவரம் பெற்றவர்கள் என அர்த்தம்.
வாடகை வீடு கிடைக்காமல், காதலிக்க பெண் கிடைக்காமல் தவிப்பவராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் ஆகிறார். கயாடு லோகர் சொகுசு அபார்ட்மெண்டில் என் டரி ஆனபின் கதையும், அவர் நடிப்பும் சூடு பிடிக்கிறது. ஜி.வி., கயாடு சம்பந்தப்பட்ட லவ் சீன் அவ்வளவு கியூட். அதை ரசித்து எடுத்து இருக்கிறார் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும். கயாடு மீது சந்தேகம், பயம், மர்மம் அடுத்து நடக்கும் சீன்களிலும் ஜி.வி நடிப்பு ஓகே. கடைசியில் அந்த ராட்சச மிருகத்துடனான சண்ட யிலும் பின்னி எடுக்கிறார். கொஞ்ச காலத்துக்குபின் ஜி.வி.பிரகாசுக்கு நல்ல கதை, நல்ல படம். ஆனால் அவர் கெட் அப், காஸ்ட்யூம் ரிச் ஆக இருக்கிறது. பிரிண்டி பிரஸ் ஆள் மாதிரி தெரியவில்லை.
படத்தின் பிளஸ் அந்த மிருகம் சம்பந்தப்பட்ட பேண்டசி விஷயம், அடுத்து கயாடு லோகர் கேரக்டர், அவர் அழகு. இதுவரை இல்லாத அளவுக்கு அழகில் ஜொலிக்கிறார் கயாடு. அவரின் காஸ்ட்யூம் செம. அந்த அபார்மெண்டில் அவர் ஜி.வியை வசீகரிக்கும் சீன்கள் நம்மையும் வசீகரிக்கிறது. அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் வேறு ஜானருக்கு மாறுகிறார். அது அதிர்ச்சி என்றாலும் அந்த சீன்களில் இன்னும் மிரட்டி இருக்கலாம். அது மிஸ்சிங்.
இவர்களை தவிர, ஒரு முக்கியமான கேரக்டரில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்த டி.எம்.கார்த்திக் வருகிறார். அவர் கெட்அப், கேரக்டரை எளிதில் மறக்க முடியாது. அதேபோல் ஜி.வி.மாமாவாக நடித்த மாறன், நண்பனாக வரும் ஆதி த் யா கதிரும் மனதில் நிற்கிறார்கள்.
தமிழில் ரத்த காட்டேரி ஜானரில் பல கதைகள் வந்து இருந்தாலும் அதை ஒரு ராட்சச விலங்கு பின்னணியில், சில மர்மங்கள் கலந்து கொடுத்து இருப்பது பிரஷ். அந்த விலங்கிற்கு முன் கதை, ஆயிரம் ஆண்டு வாழ்வு இதெல்லாம் கூடுதல் பலம். அந்த விலங்கு சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக் சீன் நேர்த்தி
பாடல்களை விட, சாம் சி. எஸ் பின்னணி இசை சிறப்பு. சில இடங்களில் சவுண்டை குறைத்து இருக்கலாம், அருண் கேமரா வொர்க்கும் நச். இடையிடையே மாறன், கதிர் காமெடி சீன் ரசிக்க வைக்கிறது.
பேண்டசி, ரத்த காட்டேரி கதையில் காதல் காட்சிகளை அதிகம் வைத்து இருக்கிறார்கள். கயாடு லோகர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அது இந்த ஜானரை முழுமையாக பீல் பண்ண வைக்க தடை ஆக இருக்கிறது. காதல், அபார்மெண்ட் காட்சி அளவுக்கு அந்த மிருகம் காட்சியில் அழுத்தம் இல்லை. அந்த மிருகம் சமந்தப்பட்ட காட்சியில் கிராபிக்ஸ் பக்கா, ஆனால் இன்னும் பயத்தை அதிகரித்து இருக்கலாம். மிருகத்தின் காதல் ஆசை, குழந்தை இதெல்லாம் கதைக்கு செட் ஆகவில்லை. 5 ஆயிரம் ரூபாய் ஷேரிங்கில் இப்படிப்பட்ட சொகுசு அபார்ட்மெண்டா என்ற கேள்வி திரைக்கதை ஓட்டை. அதேபோல் அந்த இமேஜின் காட்சியை இன்னும் அழுத்தமாக தெளிவாக சொல்லலாம். கிளைமாக்ஸ், அடுத்து வரும் திருப்பம் பரபரப்பு. வழக்கமான படங்களுக்கு மத்தியில் இம்மார்டல் மாறுபட்ட அனுபவம். ரத்த காட்டேரி, ராட்சத விலங்கு, பேண்டசி கதை விரும்புகிறவர்களுக்கு இன்னும் பிடிக்கும்.
இம்மார்டல் - ஒரு ரத்தக் காட்டேரியின் காதல் கதை