உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு கட்டும் யோகம்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு கட்டும் யோகம்

இந்த மாதம் புதன் டிச.3ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை. காரணம் சுக்கிரன் நவ.23ல் இருந்து நன்மை செய்ய தொடங்குவார்.  மேலும் செவ்வாயும் நற்பலன் கொடுக்க தவற மாட்டார். மனதில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். காரிய அனுகூலம் உண்டாகும். நவ.22க்கு பிறகு பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர் அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். அதிக செலவு செய்யாமல் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தின் அவசிய தேவை தவிர வேறு எந்த ஆசைகளை வளர்க்க வேண்டாம். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பணிக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். நவ.22க்கு பிறகு குடும்பத்தில் நற்பெயர் கிடைக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. வெளியூரில் தங்க நேரிடும். டிச.2க்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.

சிறப்பான பலன்கள்:

தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும்.   தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும். புதிய வீடு,மனை கட்டும் யோகம் கூடி வரும்.

ஐ.டி. துறையினருக்கு டிச.2 க்கு பிறகு அனுகூலமான காலகட்டம்.  உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். சக ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். வக்கீல்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.


போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும்.   அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பொதுநல சேவகர்களுக்கு நவ.22க்கு பிறகு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன  மறையும்.   கலைஞர்கள் நவ. 22 க்கு பிறகு உங்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 


விவசாயிகள் பாசிப்பயறு, நெல், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருவாய் காண்பர்.     
பள்ளி மாணவர்களுக்கு  புதன் சாதகமாக காணப்படுவதால் வளர்ச்சி காணலாம். பொது அறிவு வளரும்.

சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்களுக்கு அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2க்கு பிறகு  இடமாற்றத்திற்கு ஆளாவர்.   மருத்துவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். வக்கீல்கள் டிச.2 க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.


ஆசிரியர்கள் சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அரசியல்வாதிகள்,  பொதுநல சேவகர்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம்.
கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் ஒப்பந்தங்கள் கிடைப்பது அரிது. விவசாயிகள் டிச.2க்கு பிறகு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பள்ளி மாணவர்கள் டிச.2க்கு பிறகு விடாமுயற்சி எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். கல்லூரி மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டாம்.

* நல்ல நாள்: நவ.17,22, 23,24, 25,28,29,30 டிச.3,4,5,11,12,13,14
* கவன நாள்: நவ.18,19, டிச.15,16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  வெள்ளிக்கிழமையில் நாகதேவதை தரிசனம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !