ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விமரிசை
ADDED :2180 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு, ராமானுஜர் கோவிலில், நேற்று, திருவாதிரை விமரிசையாக நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், அவர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை அன்று, சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.இதற்காக, நேற்று காலை, கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள், மண்டபத்தில் ராமானுஜர் அந்தாதி பாடினர். காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரம் முடிந்து தீபாராதனை நடந்தது.