உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி காலபைரவர் கோவிலில் பைரவர் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி காலபைரவர் கோவிலில் பைரவர் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி: காலபைரவர் கோவிலில், 809ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நடக்கிறது. கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், 809ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா வரும், 20 காலை, 7:00 மணிக்கு எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தலைமையில் நடக்கிறது.

விழாவையொட்டி, காலை கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கின்றன. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் சுவாமி உற்சவம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும், 5 ரோடு ரவுண்டானா பகுதியில் இருந்து, இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகளுடன், கால பைரவரை குலதெய்வமாக வழிபடும், 165 கிராமத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !