உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலில், கொடியேற்று விழா நேற்று நடந்தது. திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், 60வது மண்டல பூஜை வைர விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நேற்று அதிகாலை, மகா கணபதி ஹோமம், உற்சவம் துவக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6:30 மணிக்கு பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி, கண்டரு மோகனரு தலைமையில் மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடந்தது. வரும் 22ம் தேதி பெருமாள் கோவிலில், ஐயப்பன் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.கார்த்திகை மாதம் துவங்கியதையொட்டி, நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். ஏறத்தாழ, 15 ஆயிரம் பேர் தரிசனம் செய்து சென்றனர்.மதியம், அன்னதானம் நடந்தது. ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தலைவர் ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பாலதண்டபாணி, பொது செயலாளர் மோகன்ராஜ், இணை செயலாளர் அசோக்குமார், பொருளாளர் சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !