நத்தம் கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :2254 days ago
நத்தம் : நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர், செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.முன்னதாக உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.