தெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., பாதயாத்திரை
                              ADDED :2171 days ago 
                            
                          
                           வேடசந்துார்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 143 பேர் பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்றனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தெலுங்கானாவை சேர்ந்த பக்தர்கள் குருசாமி பாலகிருஷ்ணா தலைமையில் 1,200 கி.மீ., பாதயாத்திரையாக செல்கின்றனர்.  ஐதராபாத்தில் இருந்து அக்.,20 அன்று மாலை அணிந்து புறப்பட்டுள்ளனர். இந்த குழுவில் 13 முதல் 85 வயது வரையான பக்தர்கள் 143 பேர் உள்ளனர். நேற்று காலை வேடசந்துார் லட்சுமணன்பட்டி கோயில் மண்டபத்தில் தங்கிய குழுவினர், மாலையில் மீண்டும் பயணத்தை துவக்கினர். ‘‘நவ.27 ல் சபரிமலையை அடைந்து சாமி தரிசனம் செய்வோம்’’ என்றனர். அவர்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அலங்கரிக்கப்பட்ட ஒரு லாரியும் உடன் செல்கிறது.