உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல்: தோய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் மற்றும் திண்டுக்கல், பழநியில் உள்ள பைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஆறுவேளை பூஜையில் பங்கேற்றனர். இதேபோல திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், பழநி திருஆவினன்குடி கோயில், தெற்குகிரிவீதி விஜயபைரவர் கோயில், பெரியநாயகியம்மன்கோயில் ஆகிய இடங்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தேங்காய், வெள்ளைப் பூசணியில் விளக்குஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.


கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !