ப.வேலூர் ஐயப்பன் ரத யாத்திரை
ADDED :2173 days ago
ப.வேலூர்: சபரிமலை, ஐயப்ப சேவா சமாஜத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் ரத யாத் திரை நடக்கிறது. தமிழகம், புதுவை மாநிலங்கள் முழுவதும், 18 ரதங்கள் இரு மாவட்டத்திற்கு ஒரு ரதம் வீதம், தினமும், நான்கு இடங்களுக்கு வலம் வருகிறது. நேற்று (நவம்., 21ல்) மாலை, ப.வேலூர் வந்தடைந்த ரத யாத்திரையை, டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் வரவேற்றனர். ஐயப்பனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.