சபரிமலை தரிசனத்திற்கு குமுளியில் முன்பதிவு மையம்
ADDED :2246 days ago
கூடலுார் :சபரிமலையில் தரிசனம் செய்ய குமுளியில் முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு கேரள போலீஸ் விர்ச்சுவல் க்யூ என்ற முன்பதிவு இணைய தளத்தை நடத்தி வருகிறது. சபரிபீடத்தில் இருந்து தனி பாதை மூலம் இவர்கள் சன்னிதானம் செல்லலாம். ஆனால் ஆன்லைன் முன்பதிவு மிகவும் விரைவாக முடிந்து விடுகிறது. எனவே நேரில் வரும் பக்தர்கள் வசதிக்காக முன்பதிவு மையத்தை கேரளா, இடுக்கி மாவட்டம் குமுளியில் 65 ம் மைல் என்ற இடத்தில் கட்டப்பனை டி.எஸ்.பி., ராஜ்மோகன் துவக்கி வைத்தார். குமுளி ஊராட்சி தலைவர் ஷீபா , இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மையத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் விரைவான தரிசனம் செய்யலாம்.