உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் கார்த்திகை சஷ்டி விழா: முருகன் கோவில்களில் வழிபாடு

நாமக்கல் கார்த்திகை சஷ்டி விழா: முருகன் கோவில்களில் வழிபாடு

நாமக்கல்: கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல், காந்தி நகர் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், சுவாமிக்கு மஞ்சள், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

* நாமக்கல், கடைவீதி சக்திவிநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில், சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

* சேந்தமங்கலம் அடுத்த, தத்தகிரி முருகன் கோவிலில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !