காட்டுவனஞ்சூரில் சம்வத்சரா அபிஷேகம்
ADDED :2188 days ago
சங்கராபுரம் : காட்டுவனஞ்சூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 6ம் ஆண்டு சம்வத்சரா அபிஷேகம் நடந்தது.அதனையொட்டி நேற்று காலை கோ பூஜை, யாக வேள்வி பூஜை திருக்கோவிலுார் நாராயண பட்டாச்சார்யார் தலைமையில் நடந்தது. பின்னர் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர், அன்பழகன், பழமலை, அருள் ஆகியோர் செய்திருந்தனர்.