சின்னாளபட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2195 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாரதிநகரில், ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர ஹோமத்துடன் துவங்கி, இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ ஆராதனைகளுடன், கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத் துடன், மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.