சென்னை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2131 days ago
சென்னை:நவசக்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் வி.பி.ஜி., அவென்யூவில், நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
அதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, நவசக்தி ஈஸ்வரன் சுவாமிக்கு, நேற்று (டிசம்., 8ல்) கும்பாபி ஷேக விழா, கோலாகலமாக நடந்தது.நேற்று முன்தினம், (டிசம்., 7ல்)விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழா, கும்ப அலங்காரம், யாக சாலை பூஜை, மூலமந்தர ஹோமம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று (டிசம்., 8ல்) காலை, 10:30 மணிக்கு, கடம் புறப்பட்டு, சிறப்பு ஆராதனை யுடன் கும்பாபிஷேகம் நடந்தது.