தெய்வீக பணியை கற்பித்தல் அவசியம் சுவாமி சிவயோகானந்தா பேச்சு
ADDED :2244 days ago
மதுரை:”குழந்தைகளுக்கு தெய்வீக பணி, ஒழுக்கத்தை கற்று கொடுப்பது அவசியம்” எனசின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம் நடந்தது. உதவி பேராசிரியர் நடராஜன் வரவேற்றார். துவக்கி வைத்து சுவாமி சிவயோகானந்தா பேசுகையில், ”தெய்வீக பணியில் ஈடுபட வேண்டும். குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும் வண்ணம் தெய்வீக பணி, ஒழுக்கத்தை பெற்றோர் கற்பிக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால சமுதாயம் மேன்மை யடையும்,” என்றார்.
மாணிக்கவாசகர் அறக்கட்டளை பிச்சையா பேசினார். ஏற்பாடுகளை மைய நிர்வாகிகள் சந்திரசேகரன், காளைராஜன், முருகேசன், டாக்டர் கண்ணன், சரவணன், சங்கரநாராயணன் செய்தனர்.