கள்ளக்குறிச்சி வினைதீர்த்தாபுரத்தில் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்
ADDED :2129 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வினை தீர்த்தாபுரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த வினை தீர்த்தாபுரத்தில் விநாயகர், மகாமாரியம்மன், தேத்திரியான், பூமனந்தாய், அய்யனார் ஆகிய கோவில்கள் உள்ளது.கும்பாபிேஷக விழாவையொட்டி, விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, கணபதி, லஷ்மி, நவகிரகம் யாகங்கள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்து, சங்கீரனம், அங்குரார்பனம், பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டது.பின்னர், யாகசாலை பிரவேசம் செய்து 7 கும்ப கலசங்கள் ஆவாகனம் நடத்திய பின் யாகம் செய்தனர்.