மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2122 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2122 days ago
திம்மராஜம்பேட்டை: ராமலிங்கேஸ்வரர் கோவில் கோபுரத்தில், மரச்செடிகள் முளைத்து இருப்பதால், கோபுரத்திற்கு ஆபத்தாக இருக்கிறது என, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் - வாலாஜா பாத் சாலையில் உள்ள திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல பேட்டை பகுதிகளில் இருக்கும் கோவில்களில், கொடி மரம் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் உடைய பெரிய சிவன் கோவில் என, கூறலாம்.இந்த ராஜகோபுரத்தின் இண்டாவது நிலையில், ஆலம் மற்றும் பிற செடிகள் புதர் மண்டிக் கிடப்பதால், ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.இதை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
2122 days ago
2122 days ago