திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை
ADDED :2485 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் காசுக்கார செட்டியார்கள் சார்பில் நெல்லிமர பூஜை நடந்தது. மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நெல்லிமர விநாயக ருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி யானது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர்கள் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் நடந்தது.