உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பத்திற்கே முன்னுரிமை

குடும்பத்திற்கே முன்னுரிமை

இறைவனை வணங்குகிறேன். அவனுக்கு அடியானாக இருக்கிறேன். முழுநேரமும்  இறைப்பணிகளில் ஈடுபடுகிறேன் என்று ஒருவர் சொல்லிக் கொண்டு  குடும்பத்தினரை விட்டு விடுவதை இஸ்லாம் ஏற்கவில்லை. "தொழுகை முடிந்ததும் இறைவன் தன் பூமியில் வைத்திருக்கும்  வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழு பலன் பெறுங்கள். நல்வாழ்வைத் தேடுவதில் உங்களின் ஆற்றல் முழுவதையும் செலவிடுங்கள்.  காரணம் சுயதேவைக்காக பிறரைச் சார்ந்திருப்பது இறை நம்பிக்கையாளனுக்கு  ஏற்ற செயல் அல்ல. அதே போல நம்மைச் சார்ந்த குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றாமல் கவலை, நிராசையில் அவர்களை ஆழ்த்துவதும் நல்லதல்ல”  என்கிறது. இறைத் தொண்டாற்றுவதோடு குடும்ப கடமைகளையும் குறையின்றி செய்ய  வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !