உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவீட்டு பொங்கலுக்கு தயாராகும் பூவரட்டி

சிறுவீட்டு பொங்கலுக்கு தயாராகும் பூவரட்டி

மார்கழியில் வாசலில் இடும் கோலத்தில் பூசணிப்பூ வைப்பர். அதிலுள்ள  தேனைக் குடிக்க வண்டுகள் வட்டமிடும்.  அதை வேடிக்கை பார்க்க குழந்தைகள்  கோலத்தைச் சுற்றி அமர்வர். அவர்கள்  பசும்பாலை கிண்ணத்தில் வைத்திருப்பர்.  கீழ்வானில் உதித்த சூரியன் பிரகாசிக்கத் தொடங்கும் போது சிறிது பாலை  பூக்களில் ஊற்றி சூரியனுக்கு நைவேத்யம் செய்வர். மீதி பாலை குழந்தைகள்  குடிப்பர். உச்சிப் பொழுதானதும் பால் ஊற்றிய பூக்கள், சாணத்தையும் ஒன்று  சேர்த்து "பூவரட்டி யாகத் தட்டி காய வைப்பர்.  மார்கழி முப்பது நாளும் தயாரான பூவரட்டியை சேகரிப்பர். இதை தை மாதத்தில்  வரும் சிறுவீட்டுப் பொங்கலுக்கு குழந்தைகள் பயன்படுத்துவர். தை மாதம்  ஞாயிற்றுக் கிழமைகளில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !