உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

* பலமுறை வற்புறுத்திய பின் ஒரு செயலை முடிப்பது பண்பாகாது. தானே  தனக்குரிய கடமையைச் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.   
* மனம் உற்சாகமுடன் இருக்க அதிகாலையில் எழுவதே நல்லது.
* பெரியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் போது, வாதங்களை முகத்தில்  அடித்தாற் போல சொல்ல கூடாது.
* கணவர், குடும்பம், தர்மம் என நல்லனவற்றைக் காப்பதே பெண்களுக்கு  பெருமை.
* கெட்டவருக்கு  உதவினால் அழிவு உண்டாகும். நல்லவருக்கு உதவினால்  நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்கும்.
* நல்ல நூல்கள், பெரியோரின் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க கூடாது.
* நல்லவரைக் காண்பது, அவரது அறிவுரை கேட்பதும், அவரோடு பழகுவதும்,  அவரது நற்குணத்தைப் புகழ்வதும் நன்மையளிக்கும்.  
* பெரிய மடல்கள் கொண்ட தாழம்பூவை விட,  சிறிய இதழ்கள் கொண்ட  மகிழம்பூவிற்கு மணம் அதிகமுண்டு.  கடலில் நிறைய நீர் இருந்தும் தாகம்  தணிக்காது. ஆனால் ஊற்று நீர் குறைவாக இருந்தாலும் குடிக்கலாம்.
* பொன் குடம் உடைந்த பின்னும் பொன்னாகவே இருக்கும். அது போல  பண்புள்ள செல்வந்தர் வறுமை அடைந்தாலும் முடிந்த வரை உதவிகளை  செய்வர்.  
* உடலோடு பிறந்து நோய் நம்மைக் கொல்கிறது. அதுபோல  உடன்பிறந்தவர்களால் தீமை ஏற்படலாம். எங்கோ மலையில் விளைந்த மூலிகை  நோய் தீர்ப்பது போல அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் கூட நமக்கு  உதவலாம்.  
* கல் பிளந்தால் மீண்டும் இணையாது. கோபத்தால் பிரிந்த கெட்டவர்கள்   சேர  மாட்டார்கள். நீரில் ஏற்பட்ட பிளவு தோன்றிய பொழுதே மறையும். அது போல  நல்லவர்களின் கோபம் உடனே மறையும். - அறிவுறுத்துகிறார்அவ்வையார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !