அனுமன் - பெயர் விளக்கம்
ADDED :2154 days ago
ஹனு என்றால் தாடை மன் என்றால் பெரிதானது. ஆகவே ஹனுமன் என்றால் பெரிய தாடையை உடையவன் என்பது பொருள். அதை அனுமன் என குறிப்பிடுகிறோம். அஞ்சனையின் மகன் என்பதால் அவர் ஆஞ்சநேயர். வாயு பகவானின் மகன் என்பதால் வாயு புத்திரன். சூரிய பகவானை குருவாகக் கொண்டு ஒன்பது விதமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்ததால், நவ வியாகரண பண்டிதர் என போற்றப்படுகிறார்.இவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரமான இன்று (டிச.25) அனுமன் கோயில்களில் திருவிழா களைகட்டும்.