உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினை விதைத்தவன் தினை அறுப்பான்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

ஸ்காட்லாந்தில் பிளெமிங் என்னும் ஏழை விவசாயி வயலில் பணி செய்யும்  போது, உதவி கேட்டு குரல் ஒன்று எழுந்தது. அந்த திசை நோக்கி ஓடிய  பிளெமிங், ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் புதை மணலில் சிக்கியிருப்பதைக்  கண்டு, அவனைக் காப்பாற்றினார். அடுத்த நாள் ஆடம்பர வண்டி ஒன்று   பிளெமிங் வீட்டு முன் நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த செல்வந்தர் ஒருவர்  இறங்கினார். "சிறுவனின் தந்தை நான்  என அறிமுகமானார்.

""என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். அதற்கு பரிசளிக்க விரும்புகிறேன்”  என்றார்

""வேண்டாம்”  என மறுத்தார் பிளெமிங்.

அவரது அருகில் நின்றவனை பார்த்து, ""உங்கள் மகனா?” என செல்வந்தர்  கேட்டார்.

""ஆமாம்”  என்றார் பிளெமிங்.

""சரி... நான் பரிசு கொடுக்கவில்லை. நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்வோம்.  என்  மகனுக்குக் கிடைக்கும் கல்வியை இவனுக்கும் அளிக்கிறேன்.

பிற்காலத்தில் இவன் பெருமைப்படும் விதத்தில் வளரட்டும்” என்றார்.
இப்படி அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. வாக்களித்தபடி உதவினார் செல்வந்தர்.
விவசாயியின் மகன், லண்டனில் உள்ள மருத்துவப் பள்ளியில் படித்தான்.  பின்னாளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டான். அவனே பெனிசிலின்  கண்டுபிடித்த சர்  அலெக்ஸ்சாண்டர் பிளெமிங். ஆண்டுகள் பல கடந்தன. ஒருமுறை செல்வந்தரின்  மகன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போது, பெனிசிலின் தான் அவனது  உயிரைக் காத்தது.

அந்த செல்வந்தரின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது மகன் சர்  வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது உண்மை! நல்லது செய்தால்  நல்லதே நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !