கம்பளி சுவாமி மடத்தில் குருபூஜை விழா
ADDED :2112 days ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 146வது ஆராதனை விழா, யோக மகரிஷி சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜின் 26வது குருபூஜை ஆராதானை விழா, நேற்று நடந்தது.யோகாச்சாரியா டாக்டர் ஆனந்த பாலயோகி கிரி தலைமை தாங்கினார். மீனாட்சிதேவி பவனானி முன்னிலை வகித்தார். காலை 6.௦௦ மணிக்கு கொடி ஏற்றி, பக்தி பாடல்கள், பஜனை நடந்தது. அபிஷேகம், ஆராதனை, 11.00 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகாஞ்சாலி நாட்டியாலயா ஆசிரியர் சண்முகம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.