/
கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க!
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க!
ADDED :2139 days ago
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!
ஆண்டின் தொடக்கத்தில் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். தீவிர முயற்சியின் பேரில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அனுகூலம் காணப்படவில்லை. ஆனால் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை நிலைமை சாதகமாக அமையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். அவப்பெயர் மறையும். செல்வாக்கு கூடும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவர். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதுமணத் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறுவர்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 27க்கு பிறகு நல்ல சம்பளத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்.
* ஆசிரியர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெறலாம்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்கள் மார்ச் 27க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.
* மாணவர்கள் மார்ச் 27க்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டி பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகுவால் பிரச்னை, அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு வீண் செலவும் ஏற்படும்.
* வியாபாரிகளுக்கு ஆக. 31க்கு பிறகு கூட்டாளிகள் வகையில் கருத்து வேறுபாடு, எதிரி தொல்லை வரலாம்.
* அரசு பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 27 வரை வேலையில் வெறுப்பு வரும். வேலையை விட்டு விடலாமா என எண்ணத் தோன்றும்.
* மருத்துவர்களுக்கு பணவிரயம் ஏற்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
* வக்கீல்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என பணியாற்றுவது நல்லது.
* ஆசிரியர்களுக்கு மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு ஏற்படலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். .
* அரசியல்வாதிகள் வெளியூர் பயணத்தால் உடல் நலக்குறைவுக்கு ஆளாக வாய்ப்புண்டு.
* விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பணப்பயிர்களை தவிர்க்கவும்.
பரிகாரம்:
● வியாழனன்று தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம்