அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் காப்பு கட்டி விரதம்
ADDED :2209 days ago
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 150க்கும் மேற்பட்ட வீரர்கள் காப்பு கட்டி விரதமிருக்கின்றனர்.மாவட்டத்தில் முதலாவதாக ஜல்லிக்கட்டு ஜன.,15ல் அவனியாபுரத்தில் நடக்கிறது.
இதற்காகஆண்டுதோறும் வீரர்கள் காப்புகட்டி 45 நாட்களுக்கு விரதமிருக்கின்றனர். மாடுபிடி வீரர் பாண்டி: தினமும் வயலில் வாடிவாசல் அமைத்து அதில் காளைகளை அவிழ்த்துவிட்டு பிடிக்க பயிற்சி எடுத்து வருகிறோம். ஓட்டம், மூச்சு, நீச்சல், வேகமாக நடத்தல், கண்களுக்கும் பயிற்சி எடுக்கிறோம். எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் பங்கேற்போம். காளைகளை பிடித்து பரிசு பெறவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படக்கூடாது. சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்க வேண்டும் என்பதற்காக காப்பு கட்டியுள்ளோம், என்றார்.