ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ADDED :2186 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பாண்டியன் கொண்டை, வைர அபய ஹஸ்தம் அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து 5ம் நாளான இன்று (டிச.,31ல்) நம்பெருமாள், பாண்டியன் கொண்டை, வைர அபய ஹஸ்தம், விமான பதக்கம், லட்சுமிபதக்கம், அண்ட பேரண்டம் பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பரமபதநாதன் சன்னிதியில் உள்ள கண்ணாடி அறையில், மார்கழி மாத பாவை நோன்பின் 15-ம் நாளான இன்று, " எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ" என்ற பாசுரத்தின் படி " வல்லானை கொன்றான் (குவளையா பீடவதம்) அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.