வாட்ஸ் ஆப்பில் பரவும் ராமேஸ்வரம் சுவாமி சிலை
ADDED :2469 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ராமநாதசுவாமி சிலை படம் வாட்ஸ் ஆப்பில் பரவியதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிலைக்கு சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற கோயில் குருக்கள் மட்டுமே அபிேஷகம், பூஜை, தீபாரதனை நடத்த முடியும். மற்றவர்கள் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை.கோயில் கருவறைக்குள் இடதுபக்கம் நின்று அலைபேசியில் எடுத்த ராமநாத சுவாமி சிலை படம் நேற்று வாட்ஸ் ஆப்பில் பரவியதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரவணன் கூறுகையில், பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் சுவாமி படத்தை அனுப்பியது கண்டனத்திற்குரியது.இது தொடர்பாக இந்து அறநிலைதுறை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.