உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறந்த பொக்கிஷம்

சிறந்த பொக்கிஷம்

உலகத்தில் சிறந்த பொக்கிஷம் எது என்றால் தங்கப்புதையல் என்றும்,  நவரத்தினங்கள் என்றும் பதில் சொல்வோம். ஆனால் நாயகம் தம் நண்பர்  ஒருவரிடம், ""மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை  அறிவிக்கட்டுமா?” என்றார்.""நல்ல பெண்ணே மிகச் சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து  நடப்பாள். கணவரின் அன்புக்கட்டளைகளை ஏற்பாள். அவர் அவளை விட்டும்  சென்று விட்டால், அவரைப் பாதுகாப்பாள்” என்றார்.


இதன் பொருள் என்ன? கஷ்டமான சூழலிலும் மனைவி இனிய முகம் காட்டினால், வெளியே செல்லும்  கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்புவார். கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம்  குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒரு வேளை, கணவரின் முடிவு துன்பத்தைத்  தரும் என்றாலும், நேரம் பார்த்து எடுத்துச் சொல்லி புரிய வைப்பாள். "அவர்  அவளை விட்டும் சென்று விட்டால் அவரைப் பாதுகாப்பாள்” என்பதிலுள்ள  "அவரை என்பது புரியாமல் இருக்கலாம். அதாவது, கணவர் இல்லாத நேரத்தில்  "அவருக்காகவே நான் இருக்கிறேன் என  கற்புநெறியை பாதுகாப்பாள் என  பொருள் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !