உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிஜமான வெற்றி

நிஜமான வெற்றி

கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் மீது பொறாமை கொண்ட சிலர், தங்களால் புகழ் பெற முடியவில்லையே என ஏங்கினர். அவரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன்  விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். நண்பர்களுடன் சாக்ரடீஸ் பங்கேற்ற  போது அழுகிய பழங்கள், கெட்டுப்போன உணவுகளை பரிமாறினர். அதிர்ச்சியடைந்த நண்பர்கள். தட்டிக் கேட்க எழுந்த போது அமைதிப்படுத்திய  சாக்ரடீஸ், பழங்களையும் ரசித்து உண்டார். வெளியே வந்ததும் ""ஏன் இப்படி  செய்தீர்கள்? அவர்களைத் தட்டிக் கேட்க வேண்டாமா?” என கொதித்தனர்  நண்பர்கள்.  ""நான் கோபப்பட்டால் எதிரிகளின் திட்டம் நிறைவேறி விடுமே! அதற்கு இடம்  கொடுக்கலாமா?” என அமைதிப்படுத்தினார். ""என்னுடைய சமாதானத்தையே  உங்களுக்குக் கொடுக்கிறேன். அவமானம் ஏற்பட்டாலும் சமாதானமுடன் இருக்கப்  பழகினால் அதுவே நிஜமான வெற்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !