உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தி இருக்குமிடத்தில் பகை

பக்தி இருக்குமிடத்தில் பகை

*  பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு  வரும்.
*  கடவுளைப் பூஜிப்பதால் மனம் தூய்மை அடைவதோடு புண்ணியமும்  உண்டாகிறது.
*  எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே  நியாயமான வழி..
*  ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும்  பொது நியாயத்தைச் செய்வது நல்லது.
*  சாப்பிடும் போது "கருணையுடன் அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி என  சிந்திப்பது நல்லது.
*  பக்தியோடு உண்பதால் நல்லெண்ணம் வளரும். இந்த பழக்கம் நல்லவர்களாக  வாழ்வதற்கு வழிவகுக்கும்.
*  உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும்  எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
*  உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும்  பாவமே.
*  மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். இதை  "கர்ம கோட்பாடு என்கிறோம்.
*  அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
*  மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது.
*  அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், பாவ விஷயங்களில்  மனம் ஈடுபடாது.
*  கல்வியை பணிவுடன் மாணவன் கற்க வேண்டும். பணிவு இல்லாத  கல்வியால் பயன் உண்டாகாது.
*  கடவுளின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தியானம் செய்யுங்கள். - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !