திருந்துவதற்கு என்ன வழி
ADDED :2121 days ago
ஒருமுறை ஒருவர் தொழுகைக்கு வரும் போது பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தார். அதைக் கண்டவர்கள் கோபம் கொண்டனர். சிலர் திட்டியதோடு அடிக்கவும் முயன்றனர்.
அப்போது நாயகம்,"" கோபம் வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய தண்ணீர் விட்டு கழுவுங்கள். பள்ளிவாசலுக்கு வருவதன் நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவதே! விவேகம் இல்லாமல் நடந்தால் மக்கள் யாரும் இறைநெறியின் பக்கம் வர மாட்டார்கள்.” என்றார். தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள் அல்லது அவர்களே வெட்கப்படும் வகையில் நன்மை செய்யுங்கள்.