உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ரா தரிசனம்: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி வீதிவுலா

ஆருத்ரா தரிசனம்: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி வீதிவுலா

மானாமதுரை: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் மார்கழி உற்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் கோயிலில் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள், பஜனை நடைபெற்றன. இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை முதல் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சூட்டுக்கோல் ராமலிங்கசாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !