ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வையாளி கண்டருளல்
ADDED :2093 days ago
திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் நடந்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த பின், 6ம் தேதி, சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. ராப்பத்து உற்சவத்தின், எட்டாம் திருநாளான நேற்று, வேடுபறி உற்சவம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டப மணல்வௌியில், மாலை, 5:15 மணிக்கு மேல், வையாளி கண்டருளினார். திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பின்னர் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.