உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கு ஒளியில் ஜொலித்த மூணாறு அனுமன் மலை

விளக்கு ஒளியில் ஜொலித்த மூணாறு அனுமன் மலை

மூணாறு: சபரிமலையில் நேற்று மகரஜோதி தெரிந்தவுடன் மூணாறு ஹனுமன் மலையில், 30,001 விளக்குகள் ஏற்றப்பட்டன.சபரிமலையில் மகரஜோதியின்போது, ஆண்டுதோறும் மூணாறில் உள்ள காளியம்மன், கிருஷ்ணர், நவ கிரக கோயில் சார்பில், அனுமன்மலையில் விளக்கேற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்பதாம் ஆண்டாக நேற்று மாலை மகர ஜோதி தெரிந்தவுடன் இம் மலையில் 30,001 விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் ஒளியில் மலை ஜொலித்தது. முன்னதாக அனுமனுக்கு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பாதுகாப்பு குழு தலைவர் மனோஜ் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !