உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில் வழங்கல்

சங்ககிரி: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. தை பிறப்பையொட்டி, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, காகாபாளையம், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பலர், பழநிக்கு, பாதயாத்திரை செல்கின்றனர். சங்ககிரி வந்த அவர்களை வரவேற்க, பள்ளிபாளையம் பிரிவுசாலை, தீரன்சின்னமலை நினைவு மண்டபம் முன், சங்கர் சிமென்ட் நிறுவனம், சேலம் மீனாட்சி ஏஜன்சீஸ் இணைந்து, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், டீ உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். பக்தர்கள் வாங்கி சாப்பிட்ட பின், மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர். இதுகுறித்து, மீனாட்சி ஏஜன்சீஸ் உரிமையாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், முருகனை தரிசிக்க, பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உபசரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து, 12ம் ஆண்டாக செய்தோம், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !